Sunday, March 13, 2016

பண்டைய தமிழர் வகுத்தளித்த கால நிலை



இன்று  என்னுடன் உரையாடிய .. ஆர் . எஸ் அவர்கள் "இயற்கை உணவு " போன்று தொன்று தொட்டு நிலவி வரும் இப்பகுதியின்   காலநிலையே "மாதிரி காலநிலையாக" கொள்ளப்படல் வேண்டும் என்று வலியுறுத்தினார்அதாவது பண்டைய தமிழர் வகுத்தளித்த கால நிலைகளாம் [1] இளவேனிற் காலம் [2] முது வேனிற்காலம் [3] கார்காலம் [4] கூதிர் காலம் [5]  முன்பனி காலம் [ 6] பின்பனிக்காலம் அதன் அடிப்படையில் நாள்தோறும் வானிலைகளைக் கணித்தால் மேம்பட்ட வானிலை உணரப்படும் என்றார். 
வழக்கமாக வானிலையில் பெரும்பான்மையான வானிலை கூறுகள் புள்ளியியல் அடிப்படையில் -30 ஆண்டு நீண்டகால சராசரி- நாளந்திர அடிப்படையில், "பெண்டாட்" எனப்படும் ஐந்தைந்து நாட்கள் சராசரி அடிப்படையில், அல்லது மாதாந்திர சராசரி அடிப்டையில் அல்லது பருவகால சராசரி அடிப்படையில் கணித்து நாளந்திர. பருவகால "விலக்கங்கள்" வெளியிடப்படுகின்றன. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. ஆனால் அந்தந்த பகுதியில் ஒரு பருவம் வந்தவுடன் அப்பகுதி தாவரங்களில் ஏற்படும் மாற்றம்,கடலோர பகுதிகளில் மீன் வரத்து, மீன் பாடு முதலியன  வழி வழியாய் அறியப்பட்டு திருநாள் [பண்டிகை] என்ற பெயரிலோ [கோவில்] திருவிழா என்ற பேரிலோ கொண்டாடப்பட்டு வந்து  இருக்கின்றன. அதாவது பருவகால நிலை மாற்றங்கள் உலகெங்கும் திருநாட்கள் ஆகவும், திருவிழா ஆகவும் கொண்டாடப்பட்டு வந்து இருக்கின்றன.  எல்- நினோ என்பது கூட "குழந்தை ஏசு" என்ற பொருளில் தென் அமெரிக்க பசிபிக் கடல் பகுதிகளில்  கடனீர் (வெப்பம்)இயல்பை விட அதிகமாக சூடாகும் நிலை "நற்றார் தினத்தை" [கிறிஸ்துமஸ்] ஒட்டி நிகழ ஆரம்பிக்கும். இன்றும் கூட "எல் நினோ தென் அலைவு" [என்சோ] அதை ஒட்டி கணிக்கப்படுகிறது. எனவே தமிழ் நாட்டிலும் தமிழ் பருவ முறையில் வானிலை நிகழ்வுகளை மாற்றி அதற்கான சராசரி கண்டு ஆய்ந்து அதற்கேற்ப புள்ளிஇயல் முறையில், உண்மை தரவிற்கும் சராசரிக்கும் ஏற்படும் "விலக்கம்" பற்றி தகவல் தந்தால் பலன் உண்டு. 

No comments:

Post a Comment