மழை பரவலை கொண்டு பார்த்தால், "நடா" புயல் வலுவிழந்து மூன்று நிலைகளாய் குறைந்த காற்றழுத்த மண்டலமாக கரைக்கடந்து இருக்கிறது. அதன் மையம் நாகூர் வெள்ளார் நதி வழி புகுந்து தஞ்சை, திருச்சி, கோவை , நீலகிரி பகுதிக்கு மிகுதி மழையையும், மற்றுமோர் பகுதி ராமேஸ்வரம்,திருவாடானை, சிவகங்கை , மதுரை, தேனி, விருதுநகர் வழியாகவும் மற்றொன்று புதுப்பட்டினம், மஹாபலிபுரம், தென் சென்னை, செஞ்சி , பூவிருந்தவல்லி, போளூர் குடியாத்தம் வேலூர் ஊடாகவும் சென்று மழை தந்து இருக்கிறது. இன்று சென்னையில் பெய்த மழைக்கும் அதுவே காரணமாம். அது மெதுவாய் தமிழகம் கடந்து அரபி கடலுக்கு சென்று நிலை கொண்டு உள்ளது.
No comments:
Post a Comment