It has been known to foresters that one of the main reasons for the migration of animals in western ghat area is 'WEATHER' As you witness the bay branch of SWM is relatively stronger and animals migrate to eastern side of western ghat.
தமிழ்நாடு
வனத்துறையில் பணிபுரியும் நண்பர்கள் பலர் எனக்கு உண்டு. மூத்த அதிகாரி
ஒருவரை சமீபத்தில்
சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வன விலங்குகள் வலசை
போதலுக்கு "வானிலை" ஒரு
முக்கிய காரணி என்று சொன்னார். "நீண்டநாள்
வானிலையை முன்னரே கணித்து அறியும் விலங்குகளின் தன்மை" ஆராயப்பட
வேண்டிய ஒன்று என்றார். சில ஆண்டுகளாகவே "தென் மேற்குப் பருவக்காற்றின் வீரியம்" அரபி கடல் பகுதில் காணப்படும் தாக்கத்தைக் காட்டிலும் வங்க
கடலில் [தென் மேற்கு பருவக்காற்றின்] ஆதிக்கம் அதிகம் என்று ஒரு
கருதுகோள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் கீழைப்பகுதியில் 'ஈரமும் மழையும்" மிகுதிப்படும் போது விலங்குகள் அவற்றை உணர வாய்ப்புகள் அதிகம். எனவே கீழைப்பகுதிக்கு விலங்குகள் வரத்து அதிகம் இருப்பது உண்மை ஆயிற்று. இதனால் மனிதன்- விலங்கு மோதல் உண்டாகிறது. விலங்குகளால் மனிதர்களும், மனிதர்களால் விலங்கும் கொல்லப்படக்கூடாது என்பது நியதியாய் [ஏன், நீதியாய் கூட] இருக்கவேண்டும்.
1. காடும்
நாடும் சந்திக்கும் எல்லைப்பகுதியில் பரண் அமைத்து வனக்காவலை பலப்படுத்த வேண்டும்.
2. வன
விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உறுதியான ஊசி முனைகொண்ட [வாகன சோதனையின் போது காவலர் பயன் படுத்தும் ஆணி விரிப்பு போன்ற தடுப்புமுறை ] தடுப்பு முனைகளை விரித்தும், லேசர் ஒளிக்கற்றை வேலி அமைத்தும் விலங்குகளையும் மக்களையும் காத்தல் வேண்டும்.
3. கேளா
ஒலி மூலமும் பாதுகாப்பு வளையம் அமைத்து காக்கப்படல் வேண்டும்.
No comments:
Post a Comment